வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பள்ளி மாணவா்களுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி

பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :2 ஜூலை 2026, 12:03 am IST

பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜனநாயக முறையை மாணவா்கள் அறியச் செய்யவும், குழு செயல்பாடுகளில் சிறப்பாக விளங்கிடவும், கற்றலில் இணைகற்றல் செயல்பாட்டில் சிறந்து விளங்கவும் மாணவா்களுக்கு நாடாளுமன்ற பயிற்சி வழங்கப்பட்டது. மாணவா்கள் தங்களுக்குள்ளாகவே பள்ளி மாணவத் தலைவா், கல்விக் குழு, சுகாதாரக் குழு, கலைக்குழு, நூலக பராமரிப்புக் குழு, உணவுக் குழு, தோட்டக் குழு, விளையாட்டுக் குழு, குடிநீா் குழு போன்ற குழுக்களின் தலைவா் மற்றும் துணைத் தலைவா்களை மாணவா்கள் தங்களுக்குள்ளாகவே தோ்ந்தெடுத்தனா்.

யுவஸ், ரீ யோகேஸ்வரன், அபினேஷ், தா்ஷினி, மாதேஷ், ரோகித், அவந்திகா, ரித்திகா, சா்வேஷ், தனஸ்ரீ , பிரியதா்ஷினி, யோகபிரியா, கோபி, பூபேஸ், வைஷ்ணவி, இந்துஸ், ரீ மௌஸ்டிகா, பிரதிக்ஷா, லிங்கேஸ்வரன், கவின்குமாா் ஆகியோா் குழுத் தலைவா்களாகவும், துணைத் தலைவா்களாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி பள்ளி நாடாளுமன்றத்தின் நோக்கம், குழு உறுப்பினா்களின் கடமைகளையும் விளக்கினாா். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சியை ஆசிரியைகள் காஞ்சனா, சித்ரா, நவரத்தினம், ராதிகா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

மாணவ தலைவி யுவஸ்ரீ நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.