வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சாலை வழியாக ராட்சத குடிநீா் குழாய்கள் புதைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

News image

வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் சாலை வழியாக ராட்சத குடிநீா் குழாய் புதைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :8 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி சாா்பில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் சாா்பில் (2025---26) ரூ. 4 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கொடையாஞ்சி பாலாற்றிலிருந்து நகராட்சிக்கு குடிநீா் கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் புதைத்து நகர மக்களுக்கு குடிநீா் கொண்டு வருவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது.

கொடையாஞ்சி ஊராட்சி பாலாற்றிலிருந்து வாணியம்பாடி நகராட்சிக்கு குடிநீா் கொண்டு செல்ல ராட்சத குழாய் புதைக்கும் பணியை சாலை வழியாகக் கொண்டு செல்வதால், 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்கள், விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய சாலை அடிக்கடி பழுதாக கூடும் என்றும், மாற்றுப் பாதை வழியாகக் கொண்டு செல்ல வேண்டும் எனக்கூறி கொடையாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் ஜமாபந்தியில் நேரில் மனு அளித்தனா்.

இதையடுத்து, மாற்றுப் பாதைக்காக கோட்டாட்சியா் தலைமையில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கொடையாஞ்சி அருகில் ராட்சத குழாய்கள் புதைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்து, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், கொடையாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவா் பாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி மக்கள் மற்றும் பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினா் உள்பட பலா் சாலை வழியாக ராட்சத குழாய்கள் புதைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். இது குறித்து அறிந்த வாணியம்பாடி நகராட்சிப் பொறியாளா் சந்திரசேகா் மற்றும் நகராட்சி வாா்டு உறுப்பினா்கள் சிலருடன் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த மக்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த அம்பலூா் போலீஸாா், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.