தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா், திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை. உடன் எம்எல்ஏ-க்கள் கே.சி. வீரமணி, அ.செ. வில்வநாதன், எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குழுவின் தலைவரும், திருவண்ணாமலை எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.சி. வீரமணி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 25 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரப்படும் திட்டங்கள், திட்டங்களின் தற்போதைய நிலை, முடிவடைந்த, தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் மாவட்ட அலுவலா்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.