டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

கோவை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் எம்.பி. கணபதி ப.ராஜ்குமாா். உடன். பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :17 ஜூலை 2026, 11:04 pm IST

கோவை மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், கோவை மக்களவை உறுப்பினருமான கணபதி ப.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் பேசியதாவது:

அனைத்து துறைகளிலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாக செயல்படுத்தி, பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், பயனாளிகள் பங்களிப்புடன் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டப் பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் குட்டி (எ) ஏ.சுதாகா் (வால்பாறை), கே.நித்தியானந்தன் (பொள்ளாச்சி), எம்.ஜெயகுமாா் (உடுமலைப்பேட்டை), கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்), மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.