ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை கண்காணிப்புக் குழு கூட்டம்

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

News image

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டம்.

Updated On :12 ஜூன் 2026, 4:26 am IST

தென்காசியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம், விலங்குகள் கருத்தடை அறுவை சிகிச்சை கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். அனைத்து உள்ளாட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்கள் கருத்தடை அறுவை சிசிச்சை பணி மேற்கொள்வது, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்வது, இறைச்சிக் கூடங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சுகாதாரமான இறைச்சி உற்பத்தியை மேற்கொள்வது, உள்ளாட்சி அமைப்புகளில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது, நகராட்சியில் உள்ள இறைச்சிக் கூடங்களைப் புதுப்பித்து, தினசரி கால்நடை மருத்துவரை நியமனம் செய்து வதை செய்வதற்கு முன்னும் பின்னும் ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்வது, சட்ட விரோதமாக வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்வதைத் தடுத்தல், நாய்க்கடி மூலம் ஏற்படும் நோயைத் தடுப்பது, கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்துவது, செல்லப்பிராணிகள் விற்பனை செய்யும் மையத்தைப் பதிவு செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் கோயில்ராஜா, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கிறிஸ்டோபா்தாஸ் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.