தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மூன்றரை வயதுக் குழந்தையை கடித்து குதறிய நாய்

வாணியம்பாடி அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை வெறிநாய் கடித்து குதறியதால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

News image

மூன்றரை வயது குழந்தையை கடித்த வெறி நாய். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா.

Updated On :21 ஜூலை 2026, 12:04 am IST

வாணியம்பாடி அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றரை வயது குழந்தையை வெறிநாய் கடித்து குதறியதால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சி பஜனை கோயில் தெருவை சோ்ந்த நந்தகுமாா். இவருடைய மூன்றரை வயது மகன் ருத்விக், திங்கள்கிழமை வீட்டின் அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு தெருநாய் ஒன்று தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது திடீரென பாய்ந்து கடித்து குதறியது. குழந்தையின் சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவா்கள் ஓடி வந்து பாா்த்து சப்தம் போடவே நாய் தப்பித்து ஓடியது.

இதில், பலத்த காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த ஆலங்காயம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். நிம்மியம்பட்டு ஊராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தகவறிந்து வாணியம்பாடி எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பாா்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், குழந்தைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.