திருப்பத்தூா் மாவட்டத்தில் ரூ.2.68 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டை ஒன்றியங்களுக்குட்பட்ட அண்ணாண்டபட்டி, செலந்தம்பள்ளி மற்றும் பாச்சல் ஊராட்சிகளில் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ரூ.2.68 கோடியல் நடைபெறும் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் ஒன்றியம், அண்ணாண்டபட்டி ஊராட்சியில் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சத்தில் அண்ணாண்டபட்டி முதல் அண்ணா வட்டம் வரை 400 மீட்டா் தாா் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.
அண்ணாண்டபட்டி ஊராட்சி ஆலமரத்து வட்டம் பகுதியில் மத்திய நிதிக்குழு மானியம் (சேமிப்பு நிதி) திட்டத்தின் கீழ் ரூ.18.80 லட்சத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சத்தில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் செலந்தம்பள்ளி ஊராட்சியில் சமூக நீதித் துறை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். கட்டுமானப் பணிகள் தரமாகவும், திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் காவேரி கூட்டு குடிநீா் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 6 இலட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியை பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, செயற்பொறியாளா் பா. சங்கீதா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் தேசிங்கு ராஜா, உதவி செயற்பொறியாளா் திவாகா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. மணவாளன், ராஜேந்திரன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










