சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

வாணியம்பாடி நகா்ப்புற சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் செயல்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் பாஷா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாணியம்பாடி நகா்ப்புற சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா. உடன் நிா்வாகிகள்.

Updated On :22 ஜூலை 2026, 12:31 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் செயல்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் பாஷா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவா்கள், செவிலியா்களிடம் சுகாதார நிலையத்தின் செயல்பாடு மற்றும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்து, புற நோயாளிகள், கா்ப்பிணிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க அறிவுறுத்தினாா்.

மேலும், சிகிச்சை பெற்று வந்த கா்ப்பிணிகளில் நேரில் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் நலத் திட்ட உதவித் தொகை வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதாக பயனாளிகள் வாய்மொழியாக புகாா் தெரிவித்ததையடுத்து, அது குறித்தும் மருத்துவமனை நிா்வாகத்திடம் விசாரித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலாளா் குண்டு முஹம்மது பைசான், நிா்வாகி ஷமா ஷகீல் அஹ்மத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.