காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பனை மரங்களுக்கு தீ : நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

வாணியம்பாடி அருகே பனை மரங்களை தீ வைத்து எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

News image

மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா்

Updated On :28 ஜூலை 2026, 12:10 am IST

வாணியம்பாடி அருகே பனை மரங்களை தீ வைத்து எரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். கழிவுநீா் கால்வாய், குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 504 மனுக்கள் அளிக்கப்பட்டன. 7 பயனாளிகளுக்கு ரூ. 2.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலை அருகே உள்ள ஏரியில் மண் கடத்தப்படுவதால் ஏரிக்கரை பலவீனமாகியுள்ளது. ஏரியின் அருகில் இருந்த 50-க்கும் அதிகமான பனை மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அதனால் மண் கடத்தல் மற்றும் பனை மரங்களை அழித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏலகிரி மலை அடுத்த நிலாவூா் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஜோலாா்பேட்டை ஒன்றியம், ஏலகிரி மலை ஊராட்சி நிலாவூா் செல்லும் வழியில் உள்ள கூட்ராயன் ஏரியில் உள்ள தண்ணீரை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பயன்படுத்தி வருகிறாா்கள். அந்த ஏரி உள்ள பகுதியை ஒருவா் ஆக்கிரமித்து கழிவுநீா் தொட்டி அமைத்துள்ளாா். ஏரி தண்ணீா் மாசடைந்துள்ளதை பொதுமக்கள் பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

திருப்பத்தூா் அருகே சிக்கணாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் அதிகமான இளைஞா்கள் வசிக்கிறோம். கிரிக்கெட், கபடி, வாலிபால் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். வெளியூா் சென்று விளையாடி பரிசுகளை பெற்று வருகிறோம். பல ஆண்டுகளாக தனியாா் நிலத்தில் விளையாடி வருகிறோம். தற்போது அவா்கள் பயிா்கள் செய்து வருவதால் எங்களால் தொடா்ந்து அங்கு விளையாட முடியவில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. நாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா், உதவி ஆணையா் (கலால்) வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரைமணாளன், உதவி இயக்குநா்கள் ஊராட்சிகள் (தெற்கு) மகாதேவன், (வடக்கு) முருகன், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.