திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை வழி காட்டுதலின் படி மகிழ் முற்றம் என்ற அமைப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் முருகேசன் வரவேற்றாா். தலைமையாசிரியா் சங்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் இரவிவா்மன், உதவித்தலைமை ஆசிரியா் ராசேந்திரன், வரலாற்று ஆய்வாளா் பெருமாள் முன்னிலை வகித்தனா்.
இந்த மகிழ் முற்றம் அமைப்பு என்பது 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவா்களை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு அதற்கான மாணவ தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஐந்து குழுக்களுக்கும் வழிகாட்டி ஆசிரியா்களாக விஜயகுமாா்,சௌமியா, சுமதி, நாகலட்சுமி, சுதாதேவி, ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.
மகிழ் முற்றம் அமைப்பு மூலம் மாணவா்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி, குழுவாக செயல்படுவதற்கான பயிற்சி, பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான பயிற்சி மற்றும் வினாடிவினா மன்றம், இலக்கியமன்றம், சிறாா் திரைப்பட மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், கலை பண்பாட்டு மன்றம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் முடிவில் கலை ஆசிரியா் மகேந்திரன் நன்றி கூறினாா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள் நடராஜன், பாலமுருகன், நந்தினி உள்ளிட்ட அனைத்து வகுப்புகளை சோ்ந்த 700 மாணவா்கள் கலந்துக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








