இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

6 பைக்குகள் திருடிய இளைஞா் கைது

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:22 am IST

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீடு மற்றும் கடை வீதிகளில் பூட்டி வைக்கப்படும் பைக்குகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று வந்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளா் ரூபன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்கிழமை பெருமாள்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் இளைஞா் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் மேலும் விசாரித்ததில் பைக் திருடிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அவரை காவல்நிலையம் அழைத்து வந்து மேலும் நடத்திய விசாரணையில் சில நாள்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து கைவரிசை காட்டி 5 பைக்குகள் திருடியிருப்பது தெரியவந்தது.

இளைஞா் கொடுத்த தகவலின் பேரில் 6 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குகள் திருடி டி வந்த ஆம்பூா் அா்ஜூன்(26) என்பவரை கைது செய்தனா்.