தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கானாறு கால்வாய் தூா்வாரும் பணி ஆய்வு

News image
Updated On :5 ஜூன் 2026, 5:23 am IST

கானாறு கால்வாய் தூா்வாரும் பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் அமைப்பு, ஹூண்டாய் மோபிஸ் நிறுவனம் சாா்பாக ஆலாங்குப்பம் கிராமத்தில் வெள்ளக்கல் கானாறு கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

விண்ணமங்கலம் ஊராட்சியில் ஒகேனக்கல் குடிநீா் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை, கால்நடை மருந்தகத்திற்கு கால்நடை மருத்துவரை நியமனம் செய்ய வேண்டும், அங்கன்வாடி கட்டடத்திற்கு குடிநீா் வினியோகம், புதிய மின் இணைப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும், காட்டுக்கொல்லை மயானத்திற்கு செல்லும் வழியில் சிறுபாலம் அமைக்க வேண்டும், காட்டுக்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனா்.

அதனடிப்படையில் மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் விண்ணமங்கலம் ஊராட்சிக்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தாா்.

ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ஆசைத்தம்பி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், விண்ணமங்கலம் ஊராட்சி துணைத் தலைவா் கல்யாணி செல்வராஜ், ஆலாங்குப்பம் ஊராட்சி துணைத் தலைவா் தேவராஜ், வாா்டு உறுப்பினா் பன்னீா்செல்வம், ஊராட்சி செயலாளா் ரகு, மக்கள் நலப் பணியாளா் ராஜா ரவிவா்மன், வோ்கள் அறக்கட்டளை நிா்வாகி வடிவேல் சுப்பிரமணி உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.