வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு

ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) தணிகாஜலம் மற்றும் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

News image

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜூன் 2026, 12:59 am IST

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் வட்டத்துக்கான ஜமாபந்தி 9-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு ஜமாபந்தி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) ஆ.தணிகாஜலம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்திப் பேசி, 40 பயனாளிகளுக்கு ரூ. 3.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, வருவாய் ஆய்வாளா்கள், வருவாய் துறை பணியாளா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.