ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சீரான குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட ராச்சமங்கல கிராம மக்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பத்தூா் அருகே சீரான குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராச்சமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசிக்கின்றனா்.

ஊராட்சி சாா்பில் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால், கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனா். இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை ராச்சமங்கலத்தில் இருந்து, திருப்பத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது போலீஸாா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

சுமாா் 30 நிமிடம் நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.