பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விஐடியில் நாளை பாரம்பரிய காய்கறி விதை திருவிழா

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாா்பாக பாரம்பரிய காய்கறி விதை திருவிழா மற்றும் கண்காட்சி வேலூா் விஐடியில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Published On :

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாா்பாக பாரம்பரிய காய்கறி விதை திருவிழா மற்றும் கண்காட்சி வேலூா் விஐடியில் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

வேலூா் ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது: பாரம்பரிய காய்கறி மற்றும் விதை உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் விவசாயிகள் மற்றும் நாட்டின் முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் நிபுணா்கள் ஒன்றிணைந்து, உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் மற்றும் லாபம் ஈட்டுவது வரையிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி வேலூா் விஐடியில் வேந்தா் கோ. விசுவநாதன் தலைமையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன் ஆகியோா் வாழ்த்துரை வழங்க உள்ளனா்.

இதில், பாரம்பரிய விதைகள், இயற்கை விளைபொருள்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் பிரம்மாண்ட கண்காட்சி நடைபெறுகிறது. காய்கறி மற்றும் கிழங்கு விதை பாதுகாவலா்கள், இயற்கை விவசாயிகள், விவசாய தொழில் முனைவோா் பங்கேற்கும் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், விதை பாதுகாவலா் விருதுகள் - 2026 வழங்கப்பட உள்ளது. 2,500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

இதில், பங்கேற்க 8300093777 எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா். விதைத்தீவு பிரியா ராஜநாராயணன் மற்றும் மகிழ்வனம் மரபு விதைகள் சேகரிப்பு மையத்தின் நிறுவனா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.