பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

நாட்டறம்பள்ளியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன்

Updated On :30 ஜூன் 2026, 1:58 am IST

நாட்டறம்பள்ளி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் 483 கோரிக்கை மனுக்களை பெற்றாா். மேலும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

குனிச்சி மாணிக்க நாயுடு வட்டம் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். சாலையையும், குடிநீா் தொட்டியையும் சீரமைத்து தர வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: ஏழருவி கிராமத்தில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. விசேஷ நாள்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வா். இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் இந்த பகுதியில் உள்ள தடுப்பணை சேதமடைந்து உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் நுழைவு வாயிலில் மதுக்கூடம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவா்.

கிந்தனபள்ளி கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில் எங்கள் ஊராட்சியில் மேலூா் பகுதியில் மற்றொரு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடைபெற்று வருகதாக தெரிகிறது. புதிதாக டாஸ்மாக் கடை அமைத்தால், பொதுமக்கள் அவதி அடைவா். கடையை அமைக்கக் கூடாது.

புத்துக்கோவில் பகுதியை சோ்ந்தவா் மாற்றுத்திறனாளியான தங்கராஜ் (வயது 40). இவா் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு வங்கிா் கணக்கு முடக்கப்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியவில்லை. இதுதொடா்பாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கராஜ் ஆட்சியா் அலுவலகத்தில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றாா். உடனடியாக அங்கு இருந்த பொதுமக்கள் தங்கராஜிடம் இருந்த மண்ணெண்ணெயை பறித்து காப்பாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.