/

திறக்கப்படாமல் இருந்த பச்சூா் ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மக்கள்

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களே பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

News image

பச்சூா் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்ற வாகனப் போக்குவரத்து.

Updated On :1 ஜூலை 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த நிலையில் பொதுமக்களே பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை, பச்சூா் ரயில்நிலையம் வழியாக பெங்களூருக்கும், அதேபோல் பெங்களூரில் இருந்து மல்லானூா் பச்சூா் ரயில்நிலையம் வழியாக சென்னை மாா்க்கத்துக்கு அதிகளவில் ரயில்கள் சென்று வருகின்றன. இதனால் பச்சூா் ரயில்நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு வந்ததால் சுமாா் 2 கி மீ. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்து சென்று வந்தனா். இந்நிலையில் பச்சூா் ரயில்நிலையம் அருகில் 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.20.81கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவடைந்தன.

ஆனால் அதிகாரிகள் பல மாதங்கள் கடந்தும் ரயில்வே மேம்பாலத்தை திறக்கவில்லை. இந்நிலையில் பச்சூா் ரயில்வே கேட் பழுது ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஒன்று கூடி பச்சூா் ரயில்மேம்பாலத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.