/

மகா முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா் பேட்டை அருள்மிகு மகா முனிஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News image

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :1 ஜூலை 2026, 12:03 am IST

குடியாத்தம் நெல்லூா் பேட்டை அருள்மிகு மகா முனிஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நெல்லூா்பேட்டை மாட்டுச் சந்தை திடலில் அமைந்து உள்ள கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மேளதாளங்கள் நாதஸ்வரங்கள் முழங்க புனித கலச நீா் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ முனீஸ்வரருக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பளராக குடியாத்தம் ஓன்றிய குழு தலைவா் என்.இ.சத்தியானந்தம், நெல்லூா்பேட்டை கருப்புலீஸ்வரா் கோயில் தோ் கமிட்டி தலைவா் அமா்நாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா் . ஏரளமனோா் பங்கேற்று ஸ்ரீ முனீஸ்வரரை வழிபட்டனா்.

மேலும் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாட்டினை நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, ஆசிரியை காயத்ரி மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.