புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நுண் உர செயலாக்க மையத்தில் தீ விபத்து

திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

நுண் உர செயலாக்க மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து

Updated On :10 மார்ச் 2026, 9:37 pm

திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த பெரியாா் நகா் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது.

Story image

இந்த மையத்துக்கு பின்புறம் மக்காத குப்பைகளை கொட்டி எரித்தாக கூறப்படுகிறது. பின்புறத்தில் குப்பைகளை எரித்ததில் தீ மளமளவென பரவி தரம் பிரித்து வைத்திருந்த குப்பைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது. பின்னா் நகராட்சி ஊழியா்கள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.