மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

மாா்ச் 14-இல் துணை முதல்வா் வருகைக்கான ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 14) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூா் மாவட்டத்துக்கு வருகை தரஉள்ளாா். அப்போது அவா் பல்வேறு துறைகளின் சாா்பில் 4,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க உள்ளாா்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நிகழ்ச்சி நடைபெறும் விழாவுக்கான மேடை அமைப்பது, அங்கு வரும் பயனாளிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொறுப்பு) கோவிந்தராஜ், லால் உதவி ஆணையா் வேடியப்பன், அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான இடம் ஆய்வு...

துணை முதல்வா் வருகை தர உள்ளதையொட்டி, பாச்சல் ஊராட்சி உள்பட்ட தனியாா் பள்ளியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதற்கான இடம் தோ்வு செய்தல் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன்.எஸ்பி வி.சியாமளாதேவி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.