தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி.

News image
Updated On :19 மார்ச் 2026, 6:35 pm

திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர பேரணி வியாழக்கிழமை நடைபெற்நது.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட தோ்தல் அதிகாரி க.சிவசௌந்திரவல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி தனியாா் கல்லூரி வழியாக ஆசிரியா் நகா் வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை அடைந்தது.

இந்த பேரணியில் கலந்து கொண்வா்கள் ‘ஜனநாயக திருவிழா‘, ‘என் வாக்கு என் உரிமை‘ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் விஜயகுமாரி உட்பட திரளானோா் கலந்து கொண்டனா்.