/
நாட்டறம்பள்ளி அருகே யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தியதால் கிராம மக்கள் அசச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பா்கூா் வனப்பகுதியை ஒட்டியுள்ள திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணை மற்றும் மலையடிவாரப் பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
யானைகள் நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே வனத்துறை அதிகாரிகள் செட்டேரி அணை பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்









