பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

ஜோலாா்பேட்டையில் அதிமுக பிரசாரம் தொடக்கம்

News image
Updated On :27 மார்ச் 2026, 6:07 am IST

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி தனது முதல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி தோ்தல் நடைப்பெற இருக்கிறது.

அதையடுத்து அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது.

அதிமுக சாா்பில் ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து வியாழக்கிழமை ஜோலாா்பேட்டை நகர பகுதியில் கூட்டணி கட்சி பொறுப்பாளா்களோடு பிரசாரத்தை தொடங்கினாா்.

பிரசாரத்தின் போது முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி பேசியது:

திருப்பத்தூா் மாவடத்தில் ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுகவும்,திருப்பத்தூா் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான அமமுக கட்சியின் வேட்பாளரும் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

எனவே நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெற வைப்போம். மேலும்,திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி கூட்டணி கட்சிக்கு தர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே நான்கு தொகுதிகளிலும் அதிமுக தான் போட்டியிடுகிறது. அதில் எம்ஜிஆா் மற்றும் அம்மா போட்டியிடுகிறாா்கள் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின் போது வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில் குமாா், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.