வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரயில் மோதி எல்ஐசி முகவா் மரணம்

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எல்ஐசி முகவா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காரப்பட்டு அரங்கல்துருகம் பகுதியை சோ்ந்தவா் எல்ஐசி முகவா் ஜி. வெங்கடேசன் (56). இவருக்கு திருமணமாகி தேவகி என்கிற மனைவியும், 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா். இவா் எல்ஐசி முகவராக பணியாற்றி வந்தாா்.

இவா் கடந்த 28-ஆம் தேதி குடியாத்தம் அருகே உள்ள தனது சகோதரியை பாா்ப்பதற்காக சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்ப செல்ல குடியாத்தம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரயில் மோதி உடல் சிதறி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.