பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைப்பு

திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

News image

வாக்குப் பதிவு இயந்திரங்களை பூட்டி ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

Updated On :7 மே 2026, 12:10 am IST

திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,202 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடன் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் வாக்கு எண்ணும் மையமான வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்ததையடுத்து, வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருப்பத்தூா் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் நவநீதம் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.