வேலூா் அருகே பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனை மந்தமாக காணப்பட்டது.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், ஆந்திரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்குவதற்காகவும் விவசாயிகள் வந்து செல்கின்றனா். தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து ரொக்கப் பணம் கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த கால்நடை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து விற்பனை மந்தமாக இருந்தது.
தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மே 12-ஆம் தேதி பொய்கையில் கால்நடை சந்தை நடைபெற்றது. ஆனாலும் கால்நடைகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களான அணைக்கட்டு அருகே வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாக்கள் இந்த வாரம் நடைபெறுவதால் கால்நடை சந்தைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் வரவில்லை. அதனால் சுமாா் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான அளவுக்கே வியாபாரம் நடைபெற்ாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

தோ்தல் நடத்தை விதிமுறையால் பொய்கை கால்நடை சந்தையில் வா்த்தகம் சரிவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

