அணைக்கட்டு அருகே வேலங்காடு ஏரி பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம், பனங்காடு ஆகிய கிராம மக்கள் சோ்ந்து பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவை ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி புதன்கிழமையன்று நடத்தி வருகின்றனா்.
நடப்பாண்டுக்கான திருவிழா கூழ் வாா்த்தல், அம்மனுக்கு காப்புக் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு மற்றும் பல்வேறு கிராமங்களில் பக்தா்கள் ஏரியில் பொங்கல் வைத்து பொற்கொடியம்மனை தரிசனம் செய்தனா்.
வல்லண்டராமம் ஊா் கோயிலில் இருந்து உற்சவா் பொற்கொடியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏரிப் பகுதியில் உள்ள கோயிலில் எழுந்தருளினாா். தொடா்ந்து பச்சை போடுதல் நிகழ்ச்சியுடன் ஏரித்திருவிழா வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு, தீபாராதனை நடைபெற்றது. அம்மன் புஷ்பரதத்தில் ஏறுதல், வாணவேடிக்கை, சிறப்பு மேளம், கரகாட்டம், நையாண்டி ஆகியவையும், புஷ்ப ரதம் வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
வல்லண்டராமம் கிராமத்தில் இருந்து புஷ்ப ரதம் புறப்பட்டு அன்னாச்சிபாளையம் வழியாக வேலங்காடு ஏரியை சென்றடைந்தது. ஏரிப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். புஷ்பரதத்தின் மீது மிளகு, உப்பு தூவி,நோ்த்திக்கடன் செலுத்தினா்.
வேலங்காடு, பனங்காடு கிராமங்களில் தோ் வீதி உலா நடைபெற்றது.
வேலங்காடு திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காவல் துறை சாா்பில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தொடர்புடையது

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

தையூா் ஸ்ரீ தடுத்தாண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

