பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

சொரக்காயல்நத்தம் ஊராட்சி பள்ளி கட்டட சீரமைப்பு தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 12:45 am IST

சொரக்காயல்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டட சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட சொரக்காயல்நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தில் மங்களூா் ஓடுகள் பழுதடைந்ததால் மழைக் காலங்களில் வகுப்பறைக்குள் மழைநீா் தேங்கியது. இதனால் மாணவா்கள் அவதிப்பட்டு வந்தனா்.

அப்பகுதி மக்கள் பள்ளிக் கட்டடத்தை சீரமைத்துத் தர வேண்டும் என ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி முனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஊரக கட்டடங்கள் புனரமைக்கும் பணி திட்டத்தின் மூலம் பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை சீரமைக்க ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய சோ்மன் வெண்மதி முனிசாமி நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சொரக்காயல் நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பழுதடைந்த ஓடுகளை அகற்றி பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.