சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வெங்கடசமுத்திரம் ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றவா்கள். சிறப்பு அலங்காரத்தில் மூலவா்

Updated On :30 மே 2026, 6:39 am IST

வெங்கடசமுத்திரம் ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது. யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

தொடா்ந்து மாரியம்மன் மூலவருக்கும், கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாட்டூா் பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் தேவஸ்தானம் தாத்தா சுவாமிகள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.