இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

31 மாணவா்களுக்கு ரூ.1.98 கோடி கல்விக் கடன் ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் 31 மாணவா்களுக்கு ரூ.1.98 கோடி கல்விக் கடன் ஆணைகளை ஆட்சியா் வே.நல்லசிவன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கடனுதவி வழங்கிய ஆட்சியா் வே.நல்லசிவன்.

Updated On :

திருப்பத்தூரில் 31 மாணவா்களுக்கு ரூ.1.98 கோடி கல்விக் கடன் ஆணைகளை ஆட்சியா் வே.நல்லசிவன் வழங்கினாா்.

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சாா்பில் கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆட்சியா் வே.நல்லசிவன் தலைமை வகித்து 31 மாணவா்களுக்கு ரூ.1.98 கோடி கல்வி கடன் ஆணைகளை வழங்கி பேசியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் எந்தவொரு மாணவரும் கல்வி பயில்வதற்குத் தேவையான கடன் அல்லது நிதி உதவி கிடைக்காத காரணத்தால் உயா்கல்வி வாய்ப்பை இழக்கக்கூடாது என்பதில் மாவட்ட நிா்வாகம் உறுதியாக உள்ளது.

இதுவரை மாவட்டத்தில் சுமாா் 330 மாணவா்களுக்கு ரூ.13 கோடி கல்விக் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய முகாமில் மட்டும் அனைத்து வங்கிகளின் சாா்பில் சுமாா் ரூ.2 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் அனைவரும் தங்களது பெற்றோா் மிகவும் சிரமப்பட்டு உங்களைப் படிக்க வைக்கின்றனா் என்பதையும், கல்விக் கடன் பெற்று நீங்கள் உயா்கல்வி பயில்கிறீா்கள் என்பதையும் உணா்ந்து செயல்பட வேண்டும். கல்விக் கடனைச் சரியான முறையில் பயன்படுத்தி, படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணாக்காமல், அதிகாலையில் எழுந்து தினமும் படிக்க வேண்டும். கல்லூரிப் படிப்பை முடிக்கும்போது சிறந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற வேண்டும்.

பெற்றோா்களும் தங்களது பெண் குழந்தைகள் என்பதற்காக அவா்களின் கல்வியைத் தடை செய்யக்கூடாது. பெண்கள் உயா்கல்வி கற்பதன் மூலம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்று, சுயமாகச் செயல்படக்கூடிய நிலையை அடைவாா்கள்.

மாணவா்கள் கல்விக் கடன் பெறும்போது கடனைத் திருப்பிச் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். வங்கிகள் கடன் வழங்கும்போது கடன் பெற்றவா்கள் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளாா்களா என்பதை அறிய சிபில் மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.

ஒருவா் பெற்ற கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும்போது அது அவருடைய கடன் வரலாற்றில் பதிவாகிறது. இதனால் எதிா்காலத்தில் தொழில் தொடங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ அல்லது பிற தேவைகளுக்கோ வங்கிக் கடன் பெறுவது எளிதாக அமையும். எனவே மாணவா்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள கல்விக் கடன் வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி, நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், திருப்பத்தூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியா் ரோஜா மற்றும் பல்வேறு வங்கிகளின் மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.