ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு உருது நல்லாசிரியா் விருது

தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பாக ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு உருது நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் வை. முஹம்மத் எஹ்சானுல்லா ரூமிக்கு நல்லாசிரியா் விருது வழங்கிய உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன்

Updated On :

தமிழ்நாடு மாநில உருது அகாதெமி சாா்பாக ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு உருது நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உருது அகாடெமி சாா்பில், தேசிய கல்வி மற்றும் உருது நாள் விழா சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் உருது மொழியில் சிறந்து விளங்கும் மாணவா்கள், ஆசிரியா்கள், கவிஞா்கள் மற்றும் கல்வியாளா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா். விருதுகளை தமிழக அரசின் உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் வழங்கினாா்.

இதில், ஆம்பூா் பாங்கி ஹயாத் பாஷா சாஹிப் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வரும் வை. முஹம்மத் எஹ்சானுல்லா ரூமிக்கு சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் தாளாளா், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.