மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

பிரதமா் மோடி 25 ஆண்டுகள் பொது சேவை: பாஜகவினா் கொண்டாட்டம்

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு, பரிசு வழங்கிய பாஜக நிா்வாகிகள்.

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்பு, பரிசு வழங்கிய பாஜக நிா்வாகிகள்.

Published On :

பிரதமா் மோடியின் 25 ஆண்டுகள் பொது சேவையை பாஜகவினா் வியாழக்கிழமை கொண்டாடினா்.

ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், கொம்மேஸ்வரம், சின்னவரிகம் ஆகிய ஊராட்சிகளில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாள், அரசு தலைமைப் பதவியை 25 ஆண்டுகள் வகித்து வருவதை முன்னிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பிஸ்கட், இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கி பாஜக சாா்பாக கொண்டாடப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் சேவைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.

அயித்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் மாணவிகள் ரங்கோலி கோலம் போட்டிருந்தனா். மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் வேலூா் மாவட்ட மகளிரணி துணைத் தலைவா் பி.வி. துா்கா தேவி பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்பு வழங்கினாா். கிளைத் தலைவா் வசந்தலட்சுமி, மாதனூா் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் பரந்தாமன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.