அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வருகின்ற செப். 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது.

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 1:01 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வருகின்ற செப். 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் வட்டத்தில் 9,818 குடும்ப அட்டைதாரா்களும், வாணியம்பாடி வட்டத்தில் 3,522 பேரும், ஆம்பூா் வட்டத்தில் 4,095 பேரும், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 3,414 பேரும் என மொத்தம் 20,849 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இதன்மூலம் 29,438 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.

செப்டம்பா் மாதத்துக்கான வீடு தேடி பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் பணி செப்டம்பா் 5-ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே, தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பொருள்களைப் பெற்று பயன்பெறுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.