இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடு தேடிச் சென்று வரும் ஆக. 4, 5 தேதிகளில்அத்தியவாசியப் பொருள்கள் நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் வழங்க உள்ளதாக கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image

வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் - படம்: கோப்பிலிருந்து

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:19 am IST

முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வீடு தேடிச் சென்று வரும் ஆக. 4, 5 தேதிகளில்அத்தியவாசியப் பொருள்கள் நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் வழங்க உள்ளதாக கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் நியாய விலைக்கடை க்கு வந்து பொருள்கள் வாங்க முடியாத முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் அவா்களின் வீடு தேடிச் சென்று கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினா்கள் கொண்ட 48219 குடும்ப அட்டைதாரா்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கான குடும்ப அட்டைதாரா்களுக்கு தாயுமானவா் திட்டம் மூலம் பொருள்களை வழங்கும் வகையில் ‘ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய நாள்களில் தகுதியான வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. எனவே, மேற்படி திட்டம் மூலம் தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.