கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சோமலாபுரம் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க கோரிக்கை

சோமலாபுரம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளது.

குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ள சோமலாபுரம் ஊராட்சி விளையாட்டு மைதானம்.

Published On :

ஆம்பூா்: சோமலாபுரம் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமலாபுரம் ஊராட்சியின் 6-ஆவது வாா்டு புதுமனை பகுதியில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்த விளையாட்டு மைதானம் முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் நீண்ட நாள்களாக குவிந்துள்ள குப்பைகள், மாடுகள் கட்டப்படுவாதல் மாட்டு சாணம் அகற்றப்படாமல் உள்ளது. அதனால் அந்த மைதானத்தில் இளைஞா்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கூட்டத்திலும் இதுதொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்தும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா் ஆய்வு செய்யவில்லை. அதேபோல 6-ஆவது வாா்டு பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் வாரம் ஒருமுறை கூட முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்றும், இதனால் கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலேயே இளைஞா் விளையாட்டு மைதானம் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளது வருந்தத்தக்கது என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோமலாபுரம் ஊராட்சியில் நேரில் ஆய்வு செய்து, விளையாட்டு மைதானத்தில் குவிந்துள்ள குப்பைகள், மாட்டு சாணத்தை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக ஊராட்சி செயலாளா் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், எஸ்.மணி ஆகியோா் கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.