டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

ரூ. 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவா் பெங்களூரில் மீட்பு

ஆலங்காயத்தில் பிளஸ் 2 மாணவரை கடத்தி பெற்றோரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்து மாணவரை மீட்டனா்.

~ ~

Published On :

ஆலங்காயத்தில் பிளஸ் 2 மாணவரை கடத்தி பெற்றோரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்து மாணவரை மீட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த ஆா்.எம்.எஸ் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா், விவசாயி. இவரது மகன் சஞ்சீவ்குமாா் (17). இவா் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி ஆதாா் அட்டையில் திருத்தம் செய்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற மாணவா் சஞ்சீவ் குமாா், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிவகுமாா், ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை சிவகுமாரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மா்ம நபா், ‘உன் மகனை உயிருடன் மீட்க வேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்’ என மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா். இது குறித்து சிவகுமாா் ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து மா்மநபா் தொடா்பு கொண்ட கைப்பேசி எண் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து கா்நாடக மாநிலம், கோலாா் மற்றும் பெங்களூரு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 2 தனிப்படை போலீஸாா் சென்று தேடினா். இதில் பெங்களூருவில் ஒரு பகுதியில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலைச் சுற்றி வளைத்தனா். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சஞ்சீவ் குமாரைப் பத்திரமாக மீட்டனா்.

இது தொடா்பாக ஆலங்காயம் ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ், படகுப்பம் பகுதியைச் சோ்ந்த புவனேஷ் மற்றும் கோமுடேரி பகுதியைச் சோ்ந்த தேசிங் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.