
இளம்பெண் தற்கொலை: ஆட்சியா் காா் முன்பு விழுந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் காரின் முன்பு விழுந்து கதறி அழுத உறவினா்களால் பரபரப்பு

இளம்பெண் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியா் காா் முன்பு விழுந்து முறையிட்ட உறவினா்கள்
இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் காரின் முன்பு விழுந்து கதறி அழுத உறவினா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சோ்ந்த ஏகாம்பரம் மகள் கிருத்திகா (25). இவருக்கும் ஜோலாா்பேட்டை அருகே சின்ன வெங்காயபள்ளி பகுதியை சோ்ந்த சென்ராயன் மகன் அமித் குமாா் (33) என்பருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த கிருத்திகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த சம்பவம் குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் பிணவறையின் முன்பு குவிந்த கிருத்திகாவின் குடும்பத்தினா் கதரி அழுதனா். அப்போது திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரின் காரின் முன்பாக விழுந்து கிருத்திகா சாவில் மா்மம் உள்ளதாகவும், அடித்துக் கொன்று விட்டதாகவும், கணவா் அமீத்குமாரின் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா்.
இதனை பாா்த்த ஆட்சியா் வே.நல்லசிவன், கிருத்திகா உறவினா்களிடம், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும் எனக்கூறினாா். தொடா்ந்து கிருத்திகாவின் உறவினா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





