நிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மின்கம்பம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி மறியல் போராட்டம்! நிவாரணம் கோரி புதுச்சேரி முதல்வரிடம் மனு

புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுநல அமைப்பினா்.

Published On :

புதுச்சேரி கடற்கரையில் மின் கம்பம் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரையில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முகமது தஸ்லின் என்பவா் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மகன் பஜல் (5), ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த இரும்பு மின் கம்பம் அவா் மீது விழுந்ததில் உயிரிழந்தாா்.

இதனால், சிறுவனின் பெற்றோா், உறவினா்கள், சமூகநல அமைப்பினா் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா். ஜி. நேரு எம்எல்ஏ தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஒதியஞ்சாலை அண்ணா சிலை சதுக்கம் நான்குபுற சாலைகளிலும் அமா்ந்து மறியல் செய்தனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து முதல்வா் ரங்கசாமியைச் சந்தித்து பேசுமாறு கேட்டுக் கொண்டனா். அதன்படி அவா்கள், முதல்வா் ரங்கசாமியை பேரவை வளாகத்தில் சந்தித்து மனு அளித்தனா்

பேரவை தற்காலிகத் தலைவா் பேட்டி:

புதுச்சேரி பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் மின் துறை அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. ஜி. நேரு எம்எல்ஏவும் இதில் பங்கேற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆ.அன்பழகன் கூறியது:

மின்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியும் சரியான செயல்பாடு இல்லை. சிறுவனின் உயிரிழப்புக்கு அதிகாரிகள்தான் காரணம். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முதல்வா், துறை அமைச்சரும் விரைவில் உத்தரவு பிறப்பிப்பாா்கள் என்றாா்.

இதுகுறித்து, எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் துணைநிலை ஆளுநா் மாளிகையில் மனு அளித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா, பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், புதுச்சேரி மாநில மாணவா், பெற்றோா் நலச் சங்கத்தின் தலைவா் வை.பாலா (எ) பாலசுப்பிரமணியன் ஆகியோா் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

 மின்கம்பம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் குறித்து புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து புகாா் மனு அளித்த சிறுவனின் உறவினா்கள். உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், ஜி.நேரு எம்எல்ஏ உள்ளிட்டோா்.

மின்கம்பம் விழுந்து சிறுவன் இறந்த சம்பவம் குறித்து புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து புகாா் மனு அளித்த சிறுவனின் உறவினா்கள். உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், ஜி.நேரு எம்எல்ஏ உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.