எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காரிலேயே டிரைவர் மாரடைப்பால் சாவு

செங்குன்றம் அருகே வாடகை காரை ஓட்டி வந்த டிரைவர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:59 pm

தினமணி

 செங்குன்றம் அருகே வாடகை காரை ஓட்டி வந்த டிரைவர், திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

செங்குன்றம் அருகே ஆங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சிவராமன் மகன் சுப்பிரமணி என்கிற பாபு (29). திருமணம் ஆகவில்லை. இவர் வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

வெள்ளிக்கிழமை பகல் 11 மணி அளவில் காரை ஓட்டிச்சென்ற அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே பாபு காரை செங்குன்றம் சர்ச் அருகே, ஓரமாக நிறுத்தி ஓய்வெடுத்ததாக தெரிகிறது. அப்போது சீட்டில் அமர்ந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

தகவலறிந்த செங்குன்றம் போலீஸார், பாபு உடலை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.