இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ.15 லட்சத்தில் சாலை, குடிநீர் பணிகள்

ரூ.15 லட்சம் செலவில் சாலை மற்றும் குடிநீர் பணிகளை மேற்கொள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:58 pm

தினமணி

ரூ.15 லட்சம் செலவில் சாலை மற்றும் குடிநீர் பணிகளை மேற்கொள்ள பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவர் அம்மு மாதவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சூரியநாராயண மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ராமஞ்சேரி, சித்தம்பாக்கம் காலனி, போந்தவாக்கம் ஊராட்சிகளில் ரூ.6 லட்சம் செலவில் சிறுமின்விசை மோட்டார் பம்பு அமைக்க வேண்டும்.

திருப்பேர் ஊராட்சி பங்காரம்பேட்டை ராமர் கோயில் தெரு, மெய்யூர் ஊராட்சி ராஜபாளையத்தில் சுடுகாடு சாலைளை ரூ.9 லட்சத்தில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராமஞ்சேரி ஊராட்சித் தலைவர் மாதவன், மாவட்டக் கவுன்சிலர்கள் வெங்கட்ரமணா, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.