திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மீண்டும் தகவல் தொடுதிரை இயந்திரங்களை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பா.ஜ.க. கட்சி பிரமுகர் சுப.செல்வராஜன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மனு விவரம்:
திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 2007-ம் ஆண்டு தகவல் தொடுதிரை இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
இந்த இயந்திரங்களில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு அந்தந்த வட்டங்களுக்கு உள்பட்ட விவசாய நிலங்கள், பட்டா உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இதனால் கிராம மக்கள் அதிக அளவில் பயனடைந்து வந்தனர். மேலும் நிலம் தொடர்பான முறைகேடுகளும் குறைந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக, வட்டாட்சியர் அலுவலகங்களில் தகவல் தொடுதிரை இயந்திரங்கள் காணப்படவில்லை.
இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மீண்டும் தகவல் தொடுதிரை இயந்திரங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









