டேங்கர் லாரி மோதி இளைஞர் சாவு
சோழவரம் அருகே, லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த முனுசாமி மகன் விஜய் (21). இவர் சோழவரம் அருகே அலமாதி பகுதியில் உள்ள


சோழவரம் அருகே, லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த முனுசாமி மகன் விஜய் (21). இவர் சோழவரம் அருகே அலமாதி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெட்ரோல் நிரப்ப வந்த டேங்கர் லாரி இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து விஜயின் தாயார் சோழவரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆந்திர மாநிலம் தடாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் பாபுவை (24) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...