அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் தாதன்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் ரூ.25 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.
தாதன்குப்பத்தில் சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான புதிய தண்ணீர்க் கால்வாய் எனப்படும் நன்நீர் குளம் உள்ளது. இந்தக் குளத்தை ஒரு கும்பல் ஆக்கிரமிப்பு செய்து குளத்தை அடைத்து 50க்கும் மேற்பட்ட மெக்கானிக் ஷெட்கள், குடியிருப்புகள், சிறிய நிறுவனங்கள் என வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்தனர்.
நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வரும் இந்தக் குளத்தை மீட்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு முயற்சி எடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் வருவாய்த் துறையினர், சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் போலீஸார், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் இணைந்து செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் அப்பகுதிக்கு வந்தனர். அங்கு, ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன்பு ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் யாராவது தங்கியுள்ளனரா, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா? என்று போலீஸார் உறுதிப்படுத்திக்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளந்து கல் போட்டுக் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இப்பணி மதியம் முடிவுக்கு வந்தது. அதன் பின், மீட்கப்பட்ட இடத்தை சென்னை குடிநீர் வாரியம் கையகப்படுத்தியது.
தொடர்ந்து, "இந்த இடம் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்குச் சொந்தமானது' என்ற வாசகம் அடங்கிய பலகையை அங்கு ஊழியர்கள் நட்டனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் விஜய்!
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது!

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்!

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
