திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டார அளவிலும் வருவாய்த் துறை சார்பில் ஜமாபந்தி முகாம் (வருவாய்த் தீர்வாயம்) மே 2-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டார அளவிலும் துணை ஆட்சியர்கள் பங்கேற்க உள்ள இந்த முகாம் மே 2-ஆம் தேதி தொடங்கி, அரசு விடுமுறை நாள்கள் மற்றும் திங்கள்கிழமை தவிர்த்து மாற்ற நாள்களில் நடத்தப்பட இருக்கிறது.
இதில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மே 2, 3, 4, 8, 9, 10, 11, 15, 16 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. இதேபோல், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் தலைமையில் மே 2, 3, 4, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 22 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 2, 3 ஆகிய நாள்களில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் ர.சக்திவேல் தலைமையிலும், பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8, 9 ஆகிய நாள்களில் கோட்டாட்சியர் கெ.ரா. திவ்யஸ்ரீ (திருவள்ளூர்) தலைமையிலும், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8, 9, 10, 11 ஆகிய நாள்களில் கோட்டாட்சியர் வி.முத்துசாமி(பொன்னேரி) தலைமையிலும், திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8, 9, 10, 11, 15, 16 ஆகிய நாள்களில் கோட்டாட்சியர் பெ.ஜெயராமன் (திருத்தணி) தலைமையிலும், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4 ஆகிய நாள்களில் கோட்டாட்சியர் இரா.பன்னீர்செல்வம்(அம்பத்தூர்) தலைமையிலும், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 22, 23, 24 ஆகிய நாள்களில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் ஆர்.ரூபன்தாஸ் தலைமையிலும், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8, 9 ஆகிய நாள்களில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மா.நாராயணன் தலைமையிலும், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8 ஆகிய நாள்களில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) செ. மணிலா தலைமையிலும், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 8, 9, 10, 11 ஆகிய நாள்களில் உதவி ஆணையர் (கலால்) எஸ். சுரேஷ்குமார் தலைமையிலும், திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2, 3, 4, 8 ஆகிய நாள்களில் சீ.ஜானகிராமன் தலைமையிலும் நடைபெற இருக்கிறது.
இதில், பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








