சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

திருத்தணியில் திருப்படி விழா ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள திருப்புகழ் திருப்படி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள திருப்புகழ் திருப்படி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழாவும், ஜனவரி 1-புத்தாண்டு சிறப்பு தரிசன விழாவும் நடைபெற உள்ளன. 
விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருக்கோயில் வளாகத்தில் தேவர் மண்டபத்தில் திருத்தணி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. 
முருகன் கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். இணை ஆணையர் செ.சிவாஜி வரவேற்றார். 
விழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பேசியது: ஆண்டுதோறும் திருத்தணியில் நடக்கும் திருப்புகழ் திருப்படி விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
மலைக்கோயிலில் கோயில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும்.
 திருத்தணி மின்வாரிய உயர் அதிகாரிகள் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு சீரான மின் விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தென்னக ரயில்வே மூலம் சென்னை - திருத்தணி, அரக்கோணம் - திருத்தணி, ரேனிகுண்டா வழியாக திருப்பதி ஆகிய  ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். 
சுகாதாரத் துறையின் மூலம் முதலுதவி சிகிச்சை  மையங்கள், நோய் தடுப்பூசி மையங்கள் அமைத்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், முன்னாள் நகர் மன்றத் தலைவர் 
டி.சௌந்தர்ராஜன், டிஎஸ்பி சேகர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.