தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத தனியார் உணவகத்திற்கு சீல்'

தனியார் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் உணவகத்திற்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்

News image
வங்கிக்  கடனை திருப்பிச் செலுத்தாத  உணவகத்திற்கு சீல் வைக்கும்  ஸ்ரீபெரும்புதூர்  வட்டாட்சியர்  ரமேஷ். 
Updated On :5 ஜூன் 2018, 9:15 pm

DIN

தனியார் வங்கியில் ரூ. 1 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் உணவகத்திற்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பக்தவத்சலம். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 5,400 சதுர அடி பரப்பளவில் நான்கு அறைகள் கொண்ட கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், பாலாஜி பக்தவத்சலம் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த இடத்தின் மீது சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 1 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளார். 
ரூ. 1 கோடி கடனில் சுமார் ரூ.11 லட்சத்தை மட்டுமே வங்கியில் கட்டிய பாலாஜி பக்தவத்சலம் மீதிப் பணத்தை கடந்த சில ஆண்டுகளைக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து வங்கியின் சார்பாக பல முறை அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பாக பக்தவத்சலத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். இதையடுத்து வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத பக்தவத்சலத்தின் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சிருக்கு உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் தனியார் உணவகத்திற்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.