கல்லூரி மாணவர்களுக்கு செப்.14-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்
கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 14-ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாவட்ட அளவில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் 14-ஆம் தேதி திருவள்ளூர் பகுதியில் உள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்லுரி முதல்வரிடமிருந்து கட்டாயம் அடையாளச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு
ரூ. 7ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ. 5ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவும் அழைத்துச் செல்லப்படுவர். மேலும், இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாம் தளம், திருவள்ளூர், தொலைபேசி எண்: 27664756 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






