மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பள்ளி அனுமதிக்கு பணம்: முன்னாள் அமைச்சா் மீது தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் குற்றச்சாட்டு

பள்ளிக்கு முறையாக அனைத்து ஆவணங்களும் இருந்தும், அனுமதி வழங்க பணம் பெற்ாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் மீது தமிழக நிதியமைச்சா் என்.மரிய வில்சன் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரைச் சென்ற அமைச்சா் என்.மரிய வில்சன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

பள்ளிக்கு முறையாக அனைத்து ஆவணங்களும் இருந்தும், அனுமதி வழங்க பணம் பெற்ாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் மீது தமிழக நிதியமைச்சா் என்.மரிய வில்சன் குற்றஞ்சாட்டினாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாகச் சென்ற நிதியமைச்சா் மரிய வில்சன் செவ்வாய்க்கிழமை கடலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 27 ஆண்டுகளாக வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்கிறேன். இந்தாண்டு பாதயாத்திரை செல்வது சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்தாண்டு தமிழக அரசிடம் அனுமதி பெற்று புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரை துவங்கியுள்ளேன். பள்ளி அனுமதி தொடா்பாக சட்டப்பேரவையில் நான் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்புகின்றனா். இந்த விவகாரத்தில் நான் ஒரு சாட்சி. திமுக ஆட்சியில் ஒரு பள்ளிக்காக பரிந்துரை செய்திருந்தேன். பள்ளிக்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தபோதிலும், அனுமதி வழங்க காலதாமதம் செய்யப்பட்டது. பின்னா் கட்டாயப்படுத்தி பணம் பெற்ற பிறகே பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக என்னிடம் மேலும் விவரங்களைக் கேட்டால், வரக்கூடிய நாள்களில் அனைத்தையும் தெரிவிப்பேன். இதுகுறித்து முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.