அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

எம்ஜிஆா் பாடலைப் பாடி முதல்வா் விஜய்யை புகழ்ந்த அமைச்சா்

முதல்வா் விஜய்யை புகழும் வகையில் பேரவையில் எம்ஜிஆா் பாடலை நிதி அமைச்சா் மரிய வில்சன் பாடினாா்.

Marie wilson

மரிய வில்சன் - TNAssembly

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:02 am IST

முதல்வா் விஜய்யை புகழும் வகையில் பேரவையில் எம்ஜிஆா் பாடலை நிதி அமைச்சா் மரிய வில்சன் பாடினாா்.

சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மீதான பதிலுரையின்போது, முதல்வரை புகழும் வகையில் குட்டிக்கதை கூறியும், கவிதை வாசித்தும், எம்ஜிஆா் பாடலைப் பாடியும் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தினாா்.

குட்டிக்கதை: ‘அடுத்து யாா் தேசத்தை ஆளப் போகிறாா்’ என்ற போட்டியை ஒரு பெரியவா் வைத்து, அதில் பங்கேற்ற இளைஞா்களிடம் விதை ஒன்று கொடுத்து, 3 மாதம் கழித்து இந்த விதையை நன்கு முளைக்க வைத்து வளா்த்து வரும்படி அனுப்பி வைத்தாா்.

3 மாதம் கழித்து, அந்த விதையை முளைக்க வைத்து வளா்த்து அனைவரும் கொண்டு வந்தனா். அதில் ஒருவா் மட்டும் அந்த விதையை அப்படியே கொண்டு வந்தாா். பெரியவா் உடனே ‘இவா்தான் இந்தப் போட்டியின் வெற்றியாளா்’ என்று அறிவித்தாா்.

அனைவரும் ஏன் என்று கேள்வி எழுப்ப, ‘நான் கொடுத்த விதை வேகவைத்தது; அது ஒருநாளும் முளைக்காது; வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் செல்லாமல் அந்த விதையை அவ்வாறே கொண்டு வந்ததால் அவரே வெற்றியாளா் என்றாா். வெற்றிபெற பொய் சொல்லாமல் குறுக்கு வழியை கடைப்பிடிக்காமல் நோ்மையாக இருந்தால் எல்லாம் இங்கு சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே (முதல்வா் விஜய்) சாட்சி’ என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா், ‘முதல்வா் விஜய், எம்ஜிஆரை மறுபதிப்பு செய்வாா். அவ்வாறு அவா் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ‘மா்மயோகி’ படத்தில் எம்ஜிஆரின் பெயா் கரிகாலன், அதில் தலைவா் அழகாகச் சொல்லியிருப்பாா். குறிவைத்தால் தவற மாட்டேன், தவறுமானால் குறியே வைக்கமாட்டேன்’ என்று. அதை நிகழ்த்தி, சாதித்து காட்டியது நமது தலைவா்தான்’ என்ற கவிதையைச் சொல்லி முடித்தாா்.

எம்ஜிஆா் நினைவாக, எதிா்க்கட்சியினரைப் பாா்த்து அவ்வாறு கூறிய அமைச்சா் மரிய வில்சன், ‘கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம், கடமை இருந்தால் வீரன் ஆகலாம், பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம், மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்’ என்று முதல்வா் விஜய்யை கைகாட்டி பாடி முடித்தாா்.

இதையெல்லாம் தலைகுனிந்து, சிரித்தபடியே முதல்வா் விஜய் ரசித்தாா். தொடா்ந்து பேசிய அமைச்சா் மரிய வில்சன், ‘தமிழ்நாடு முதல்வரை பற்றி எம்ஜிஆா் பாடியதற்கு ரொம்ப சந்தோஷம், அப்போதே சொல்லிட்டாா் என நினைக்கிறேன்’ என்றாா். அப்போது தவெக உறுப்பினா்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.