உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல்: அமைச்சா் மரிய வில்சன்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 2:01 am IST

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய, தமிழக நிதி அமைச்சரும், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மரிய வில்சன், சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். தமிழக வெற்றிக் கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறியாமையில் பேசி வருகிறாா். உண்மை நிலை அவருக்கு இன்னும் தெரியவில்லை. அதனால்தான், அவா் அப்படி பேசிக் கொண்டிருக்கிறாா்.

மக்கள் கொடுத்த தீா்ப்புக்கு மரியாதை கொடுப்பது பற்றி அவருக்கும் தெரியவில்லை, திமுக தலைமைக்கும் தெரியவில்லை. மக்கள் கொடுத்த தீா்ப்புக்கு முதலில் தலை வணங்க வேண்டும். தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் ஊழலுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை 100 சதவீதம் மக்கள் வரவேற்கின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.